பதிவு செய்த நாள்
08
ஜூன்
2020
12:06
கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், சைலன்ட்வேலி பகுதியில், பழத்தில் வெடிபொருள் வைத்து, கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, நேற்று மாலை கோவை மக்கள், வீடுகளில் தீபம் ஏற்றி, அஞ்சலி செலுத்தினர். நமது நாளிதழ் சார்பில், விடுக்கப்பட்ட உருக்கமான வேண்டுகோளை ஏற்று, கோவை மக்கள், குடும்பத்துடன் விளக்கேற்றி, இறந்த யானையின் ஆன்மா சாந்தியடைய, மனமுருகி வேண்டினர். யானைக்கு நேர்ந்த கொடுமையை, பெற்றோர் வாயிலாக கேட்டறிந்த குழந்தைகள் சிலர், மலர்களால் யானையின் உருவத்தை வடிவமைத்து, உணர்வுபூர்வமாக தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.