பதிவு செய்த நாள்
12
ஜூன்
2020
10:06
திருவனந்தபுரம்; மாதாந்திர பூஜைக்காக, சபரிமலை, நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது. எனினும், கோவிலில் வழிபட, பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. முடிவுகொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும், மார்ச், 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், நாடு முழுதும், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில், ஐந்தாவது முறையாக ஊரடங்கு, ஜூன், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 31ம் தேதி, பல தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை, ஜூன், 8ம் தேதி முதல் திறக்கலாம் என, தெரிவித்தது.இதையடுத்து, பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.இந்நிலையில், கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில், ஆனி மாத பூஜைக்காக, நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது. கோவிலில் வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, எதிர்பார்க்கப் பட்டது.
இது குறித்து, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:சபரிமலை கோவில் நடை, ஆனி மாத பூஜைக்காக, நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறையாததால், கோவிலில் வழிபட, பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.சபரிமலை தந்திரி மற்றும் கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளுடன் பேசிய பின், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.ஆபத்துசபரிமலை கோவில், 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை திறக்கப்படும். தினமும், அன்றாட பூஜைகள் மட்டும் நடத்தப்படும். 19ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடக்க இருந்த, அய்யப்பன் ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சபரிமலை தந்திரி, மோஹனரரு கூறுகையில், கேரளாவில் வைரஸ் பரவல், சமீபகாலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால், பக்தர்களை கோவிலில் வழிபட அனுமதிப்பது ஆபத்தாக முடியும், என்றார்.