Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் வழிபாடு செய்ய ... இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் கோயிலை திறக்க பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் கோயிலை திறக்க பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2020
10:06

மயிலாடுதுறை: திருக்கடையூர் கோயிலில் ஊரடங்கு காரணமாக 5 ஆயிரம் திருமணங்கள் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களை போல வழிபாட்டுக்கு கோயிலை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்து ள்ளது. இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருக்கடையூர் கோயில் மார்க்கண்டேயனுக்காக சுவாமி, எமனை சம்ஹாரம் செய்து, பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமனை மீண்டும் உயிர்ப்பிக்க செய்த தலமாகும். அதனால் இத்தலத்தில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்து சுவாமி, அம்பாளை வழிபடுவது வழக்கம். இந்த கோவிலில் 59 வயது முடிந்து 60 வயது தொடங்குபவர்கள் மற்று ம் 61, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தம்பதி சமேதராய் முறையே உக்ரரத சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபி ஷேகம், சொர்ணாபிஷேகம் ஆகிய சிறப்பு பூஜைகள், ஹோமங்களை செய்து மாங்கல்யம் அணிவித்து, சுவாமி அம்பாளை வழிபடுவார்கள். மற்ற கோயில்களில் முகூர்த்த நாட்க ளில் மட்டுமே திருமணம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் ஆண்டுமுழுவதும் நட்சத்திரம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன.

இவ்வாறு தினந்தோறும் இந்த கோவிலில் 60 திருமணங்கள் மகாமண்டபம், சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறும். அதனால் திருக்கடையூருக்கு நாள்தோறும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் செய்து செல்வார்கள். தற்போது ஊரடங் கு காரணமாக 80 நாட்களுக்கு மேல் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை நீடிக்கிறது. அர்ச்சகர்கள் மட்டும் தினசரி பூஜைகளில் ஈடுபட்டுவருகின்றனர். பலர் கோயிலுக் கு வெளியே நின்று சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதால் இக்கோவிலில் செய்யப்படவிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரு மணம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். கோவிலுக்கு பக்தர்கள் வருவது தடைபட்டதால் கோவிலை சுற்றியுள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், வியாபார ஸ்தலங்கள் மூடப்பட்டு திருக்கடையூர் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் கோயிலை மட்டுமே நம்பி வாழும் அர்ச்சகர்கள், சிப்பந்திகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், பூ வியாபாரிகள், புகைப்படக் கலைஞர்கள் என ஆயிரக்கானோர் தங்களது வாழ் வாதாரத்தை இழந்துள்ளனர்.எனவே பல லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு மத்திய அரசன் வழிகாட்டு தல்படி மற்ற மாநிலங்களில் கோயில்கள் திறக்கப்பட்டது போல தமிழகத்தில் உள்ள கோயில்களையும் திறக்க வேண்டும். குறிப்பாக, திருக்கடையூர் கோயிலை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் வளையல்களால் சிறப்பு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆடிப்பூர விழாவில் ஆண்டாளுக்கு நூர்தடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar