சாத்துார்: சாத்துார் இருக்கன் குடி மாரியம்மன் கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடபட்டது.
இருக்கன் குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கருணாகரன், விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி கணேசன், பரம்பரை பூஜாரி அறங்காவலர் குழு, உறுப்பினர்கள் முன்னிலையில் கோசாலை உண்டியல் மற்றும் பொது உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவில் தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். ரொக்கம் ர 30,51,096 ம், தங்கம் 159.900 கிராம், வெள்ளி438.700 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடந்த பிப்ரவரி 19ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடப்பட்டது. இதன் பின்னர் மார்ச் 24ம் தேதி ஊரடங்கின் போது கோவில் நடை சாத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பொருள் கணக்கிடப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.