திருவாடானை : திருவெற்றியூர் கோயிலில் முடி காணிக்கை செலுத்த செல்லும் பக்தர்கள் கொரோனா ஊரடங்கால் கோயில் திறக்காததால் சலுான்களில் மொட்டை போட்டு செல்கின்றனர்.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயிலில் வெள்ளி, செவ்வாய் நாட்களிலும், சித்திரை, ஆடி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அப்போது பக்தர்கள் முடி காணிக்கை நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம்.கொரோனா ஊரடங்கு தளர்வால் கோயில் திறக்கப்படும் என்று பட்டுகோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைசேர்ந்த பக்தர்கள் சென்றனர். கோயில் திறக்காததால் அங்குள்ளசலுான்களில் முடிகாணிக்கை செலுத்தினர். தேவகோட்டை ராமசாமி கூறியதாவது:ஊரடங்கு தளர்வு செய்யபட்டபோதும் கோயில் திறக்கவில்லை. பாகம்பிரியாள் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசிக்காமல் செல்வது ஏமாற்றமாக உள்ளது, என்றார்.