கொரோனா பீதி: வெறிச்சோடிய திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2020 12:06
காரைக்கால்: காரைக்காலில் சனீஸ்வரன் பகவான் கோவில் கொரோனா பீதியால் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சேடி காணப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இதனால் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோவில்கள் கடந்த 80 நாட்களாக அடக்கப்பட்டு கடந்த 8ம் தேதி மீண்டும் புதுச்சேரி அரசு பாதுகாப்பு வழிகாட்டி கோவில் திறக்கப்பட்டது.இதனால் உள்ளூர் பக்தர்கள் ஒரு சிலர் மட்டும் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் வெளியூரில் இருந்து பக்தர்கள் யாரும் வரவில்லை நேற்று சனிக்கிழமை என்பதால் தமிழகம்.புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பீதி அதிகம் காணப்பட்டு வருவதால் அரசு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் வருகை இல்லாமல் திருநள்ளாறு கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் இ.பாஸ் மூலம் பெற்றுக்கொண்டு பக்தர்கள் அவரது விபரங்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் பகவானை தரிசனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக அனைத்து பக்தர்களையும் கைகளை நன்கு கழுவிய பின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் சுவாமி தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.