அசுத்தமான கோவில் குளம் சுத்தப்படுத்த நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2020 03:06
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மக்கள் பயன்படுத்தும் கோவில் குளம் போதிய பராமரிப்பு இல்லாததால் அசுத்தமான நிலையில் காட்சியளித்து வருகிறது.
உளுந்துார்பேட்டை அருகே செம்மணங்கூர் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் எதிர்புறத்தில் உள்ளது.கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் குளத்தில், துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவின் போது சுவாமியை தீர்த்தவாரி செய்தல் மட்டுமின்றி, கிராம மக்கள் தங்களின் அத்தியாவசதிய தேவைக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த குளம் காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால், தற்போது அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது. குளத்தில், தற்போது பாசிகள் படிந்தும், ஆங்காங்கே குப்பைகள் நிறைந்தும் யாருக்கும் பயன்படாத வகையில் காட்சியளித்து வருகிறது. பல்வேறு கோவில் குளங்களில் தண்ணீரின்றி வரண்டு காட்சியளிக்கும் சூழலில் துர்க்கை அம்மன் கோவில் குளத்தில் தண்ணீர் அதிகளவில் இருந்தும், யாருக்கும் பயன்பாடின்றி உள்ளது.இந்த குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.