பதிவு செய்த நாள்
15
ஜூன்
2020
05:06
2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் தேதி நிகழ்கிறது. வரும் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய நன்னாளில் காலை 10.22 மணிமுதல் பகல் 1.42 மணிவரை சூரியகிரகணம் நிகழ்கிறது. சூடாமணி கிரகணம் மிகவிசேஷமானது. இதை சூரியோபராக புண்யகாலம் என்பர். அதாவது சூரியனின் சிறு பாகத்தில் மட்டும் பிடித்து விடுவதால் இப்பெயர். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சம்பவிப்பதால் அதன் முன்பின் நட்சத்திரங்களாகிய ரோகிணி திருவாதிரை மற்றும் மிருகசீரிஷத்தின் அனுஜன்மம் சித்திரை, திரிஜன்மம் அவிட்டம் ஆகிய ஐந்து நட்சத்திரக்காரர்கள் மட்டும் கிரகணசாந்தி செய்து கொள்ளவேண்டும். கீழ்காணும் சுலோகத்தை பனை ஓலையில் எழுதி கிரணகாலத்தில் இயன்றவரை ஜபம் செய்து அவ்வோலையுடன் இயன்ற தட்சணை வஸ்திரம் வெற்றிலைபாக்கு இவற்றுடன் அந்தணர் மற்றும் முதியோர்க்கு தானம் செய்து, இறைவனை வழிபட வேண்டும்.
யோஸௌவஜ்ரதரோ தேவ:
ஆதித்யானாம் ப்ரபுர்மத:
ஸஹஸ்ரநயனஸ்ஸூர்ய க்ரஹபீடாம் வ்யபோஹது
இதனை ஜபிக்க அனைத்து பீடைகள் நோய்நொடிகள் எல்லாம் நீங்கிடும். கிரகணகாலத்தில் கோயில்களில் புண்யகால தீர்த்தம் அபிஷேகம் வேத திருமுறைப்பாராயணங்கள் செய்திட வேண்டும் என்பது ஆகமமரபு. அன்றயதினம் காலை 10.45 மணியளவில் தீர்த்தம் கொடுக்க வேண்டும். பகல் 11.0 மணியளவில் கிரகணபுண்யகால தர்ப்பணம் செய்து முன்னோர் ஆசியைப்பெறவேண்டும். இதை முறையாக செய்தால் நாடு தற்போது இருக்கும் கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்தும் மீளும் என்பது உண்மை.
ஏ.வி.சுவாமிநாதசிவாசாரியார், மயிலாடுதுறை.