சபரிமலை; சபரிமலை சன்னதியில் மரசிற்ப பணிகள் நேற்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.சபரிமலையில் தற்போது ஆனி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. குறைந்த அளவு பூஜாரிகள் மற்றும் ஊழியர்களுடன் பூஜைகள் நடைபெற்று வருகிறது.சன்னதி முன்பு பக்தர்கள் நிற்கும் இடத்திலும், கொடி மரத்தின் அருகிலும் மேற்கூரையில் வெள்ளை நிற விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதை மாற்றி மரத்தில் நவக்கிரகங்கள் மற்றும் அஷ்டதிக் பாலகர்களின் சிற்பங்கள் செதுக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான பணிகள் நேற்று காலை தொடங்கியது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சிறப்பு பூஜைகள் நடத்திய தேக்கு தடியை, சிற்பி மகேஷ் மோகனிடம் கொடுத்தார். மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி, நிர்வாக அதிகாரி ராஜேந்திரபிரசாத், கோயில் தனி அதிகாரி ராஜேந்திரன் நாயர், பி.ஆர்.ஓ. சுனில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆனி மாத பூஜைகள் முடிந்து இன்று இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 15-ம் தேதி மாலை நடை திறக்கும்.