Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பில்லாத கோவில் குளம் ... திருமலையில் 8105 பேர் சுவாமி தரிசனம் திருமலையில் 8105 பேர் சுவாமி தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வளைய சூரிய கிரகணம் : பரிகாரம் யாருக்கு?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வளைய சூரிய கிரகணம் : பரிகாரம் யாருக்கு?

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2020
11:06

சென்னை; வானில் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் இன்று காலை 10:22 மணியளவில் துவங்கியது. பிற்பகல் 3:04 மணி வரை நீடிக்கும். முழு சந்திர கிரகணம் பிற்பகல் 12: 10 மணிக்கு நிகழ்கிறது.

பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்படும்.ஜூன் 21ல் நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால், சூரியன் வளையம் போன்று தோன்றுகிறது. இது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இது காலை 10:22 மணிக்கு துவங்கியது.

மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் தெரியும். ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் 34 சதவீதம் தெரியும். தமிழகத்தில், சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தெரிய துவங்கியது. அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும். வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. தொலைநோக்கி, சூரிய கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.

பரிகாரம் யாருக்கு?:

* உடல்நலம் இல்லாதவர்கள் காலை, 6:00 மணிக்கு முன்பும், மற்றவர்கள் பகல், 2:00 மணிக்கு பின்பும் சாப்பிடவும்.
*ஞாயிறு பிறந்தவர்கள், ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில்சூரிய திசை, புத்தி உள்ளவர்கள் பகல்,2:00 மணிக்கு பிறகு, கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.
*குலதெய்வம், இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கை வைத்து, கோவில் திறந்தபின் செலுத்தவும்.
* இஷ்டதெய்வங்களின் மந்திரங்களை ஜபிக்கலாம்.(உ.ம்: ஸ்ரீராமஜெயம், ஓம் நமசிவாய)
* கிரகண நேரத்தில் சாப்பிட வேண்டாம்.
* சூரியனை பார்க்க வேண்டாம்.
*கர்ப்பிணிகள் வெளியே செல்ல வேண்டாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar