கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை பெரிய ஏரிகோடி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கிருஷ்ணகரிட பழைய பேட்டையில் பெரிய ஏரிகோடி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதத்தின் அனைத்து தேய்பிறை அஷ்டமிகளிலும் காலபைரவருக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படுகிறது. தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் நேற்று தேய்பிறை அஷ்டமி வந்தது. இதையொட்டி காலபைரவர் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ததுடன் தங்களது வேண்டுதல் நிறைவேற சாம்பல் பூசணி, எலுமிச்சை தீபம் இட்டு காலபைரவரை வழிப்பட்டு சென்றனர்.