பதிவு செய்த நாள்
27
ஜூன்
2020
01:06
நகரி : ஏகாம்பரகுப்பம் விநாயகர் கோவில் குளத்தில், 50 ஆண்டுகளுக்கு பின், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், துார் வாரும் பணி நடந்து வருகிறது.
சித்துார் மாவட்டம், நகரி நகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரகுப்பத்தில், விநாயகர் கோவில் உள்ளது. கிராம கோவில் குளம், பழைய வாய்ந்ததும், 2,000 அடி சுற்றளவு கொண்டது. குளத்தில் தண்ணீர் இருந்தால், கிராமத்தில் குடிநீர் பிரச்னை வராது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.இக்குளத்தை, 50 ஆண்டுகளுக்கு பின், கிராம மக்கள் துார் வாரி சீரமைக்க தீர்மானித்தனர். பின், ஒரு மாதமாக கோவில் குளம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைப்பு பணிகள், ஏகாம்பரகுப்பம் கிராம இளைஞர்கள், மாணவர்கள், கே.வி.பி.ஆர்.பேட்டை, சத்திரவாடா, பொதட்டூர்பேட்டை மற்றும் குருவராஜபேட்டை ஆகிய பகுதி சிவ பக்தர்கள் ஒன்று கூடி, நடத்தி வருகின்றனர்.குளத்தின் நான்கு புறமும் புதியதாக, ஆறு அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து, படிகள் மற்றும் கரைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.மேலும், குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டது. இப்பணிகள் ஒரிரு நாளில் முடிவடையும் நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.