பதிவு செய்த நாள்
29
ஜூன்
2020
11:06
அயோத்தி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பார்வையிட்டார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது.இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை, கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அமைத்தது. மார்ச்சில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கட்டுமான பணிகள், மே இறுதியில் துவங்கின. இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட, அயோத்திக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சென்றார். கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, அறக்கட்டளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.பின்னர், அயோத்தி மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின், லக்னோவுக்கு திரும்பினர். இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காலத்தில், பள்ளி கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என, கோரி, முதல்வரிடம் மனு கொடுக்க, அயோத்தியில் உள்ள ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். இதை தடுக்கும் வகையில், போலீசார், ஹிந்து அமைப்பு நிர்வாகிகளை கைது செய்து அப்புறப்படுத்தினர்.