Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கிராம கோவில்கள் திறப்பு: விதிமுறை பின்பற்ற ‘அட்வைஸ் கிராம கோவில்கள் திறப்பு: விதிமுறை ... கிராம கோயில்களில் சிறப்பு பூஜை கிராம கோயில்களில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலதெய்வ வழிபாட்டில் கொரோனாவை வெல்வோம்!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2020
12:29

திண்டுக்கல்:ஆபத்திலும், உருவத்திலும், அணுவைவிட அதிபயங்கர கொரோனாவால் உலகமே வீட்டுக்குள் முடங்கிவிட்டது. நுாறு நாட்களுக்கும் மேலாக, தெருக்களில் நடமாட அஞ்சுவதுடன், இறைவனின் திருத்தலங்களுக்குக் கூட செல்ல வழியின்றி பக்தர்களான மக்கள் பரிதவித்து வருகின்றனர். எப்போது ஒழியும் இந்த கொரானா கொடூரம் என தங்கள் மனக்கவலையைக் கூட தெய்வங்கள் முன் அழுது முறையிட வாய்ப்பின்றி மன இறுக்கத்துடன் வீட்டுக்குள் மறைந்து வாழ்கின்றனர் பலர். ஊரடங்கு தளர்வில் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடும் தமிழக அரசு, இம்முறை கிராம கோயில்களை பக்தர்கள் வழிபட திறந்துவிட்டுள்ளது. இதனால் தங்கள் மனதுக்கும் வடிகால் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட பக்தர்கள் உள்ளனர். அவர்களின் உள்ளக் கிடக்கையை நம்மிடம் கொட்டினர், இப்படி:

யாகங்கள் நடத்த வேண்டும்: கிராம கோயில்களை திறக்க அரசு அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது. பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தும் இதுவரை கொரோனாவிற்கு கண்டுபிடிக்கப்படவில்லை. பல துன்பங்களை மக்கள் சந்திருத்து வரும் நிலையில், கோயில்களில் வழிபடுவதன் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். மனித குலத்திற்கு அச்சுறுத்தலான கொரோனா தொற்று ஒழிவதற்கும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் யாகங்கள் நடத்த வேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பூஜாரிகள் அரசு அறிவுறுத்துவதுபோல சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோயிலில் மஞ்சள் நீர் போன்ற கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும். வருவாய் இழந்துள்ள கோயில் பூஜாரிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். -ப.உதயகுமார், மாவட்ட தலைவர் பூஜாரிகள் பேரமைப்பு, ஆவிளிபட்டி

மனஅமைதிக்கு வழிபட வாய்ப்பு: கொரோனா பிரச்னையால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடி கிடந்ததால் பெரும்பாலான மக்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர். தற்போது ஊரக பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க தரப்பட்ட அனுமதி மகிழ்ச்சியை ஏற்படுத்தி, ஏக்கத்தை போக்கியுள்ளது. மன அமைதிக்கும், வேண்டுதல், பிரார்த்தனைக்காகவும் வழிபட ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குலதெய்வ கோயில்கள் பெரும்பாலும் ஊரக பகுதியில் இருப்பதால் குல தெய்வ வழிபாட்டிற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா பிரச்னையில் அரசு வலியுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றி, தொற்று பரவலை தவிர்த்து சமூகத்தை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.  -எஸ்.வெங்கடேஷன், அர்ச்சகர், வடமதுரை

பூட்டிய கோயிலை கும்பிட்டேன்: மாலையில் வேடசந்துார் ஓம்சக்தி கோவிலுக்கு, வழக்கமாக நடந்து சென்று வழிபடுவேன். கொரோனா பாதிப்பு வந்தபின் கோயில் மூடப்பட்டதால் அங்கு செல்ல வழியில்லை. இருந்தாலும் அவ்வப்போது பூட்டிய கோயிலை கும்பிட்டு வந்தேன். தற்போது கோயில்கள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு உண்மையிலேயே மகிழ்ச்சியை தருகிறது. மனப்பாரத்தை ஆண்டவன் சன்னதியில் இறக்கி வைப்பதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வாய்ப்பு கிடைக்கும். பக்தர்கள் கோயிலுக்கு அரசு அறிவித்தபடி முகக்கவசம் போன்ற பாதுகாப்பு சாதனங்களை முறையாக அணிந்து, சமூகஇடைவெளியை கடைபிடித்து வழிபட வேண்டும்.

-எஸ்.சந்திரா, லேப் டெக்னீசியன், வேடசந்துார்.

நுாறு நாட்கள் தவம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கோயிலுக்கு செல்வேன். கொரோனா ஊரடங்கால் நுாறு நாட்களாக கோயிலுக்கு செல்ல முடியவில்லை. இந்த மாதிரியான நிலை ஒருபோதும் வந்ததில்லை. கோயிலுக்கு உள்ளே அனுமதியில்லை என்றாலும் வெளியில் நின்று சாமி கும்பிடுவேன். கோயில் எப்போது திறக்கும், சாமியை கண் குளிர பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன். நுாறு நாட்களாக தவம் இருந்ததற்கு பலன் கிடைத்து விட்டது. இனி தினமும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவேன். மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வர வேண்டும். கோயில் திறந்தாலும் அரசு சொன்ன விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுவேன்.–  எம்.முத்துலட்சுமி, சென்னமநாயக்கன்பட்டி.

மனக்கவலையை தெரிவிக்க வாய்ப்பு: எங்கள் ஊரில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோயிலில் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக இருக்கும். சுற்றுப்புற கிராமத்தினர் பங்கேற்று சிறப்பு செய்வர். கொரோனாவால் திருவிழா நடக்காததால் பக்தர்கள் சோர்ந்து போயினர். ஊரடங்கால் 4 மாதங்களுக்குப் பிறகு கோயில் திறந்தது மனசுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நம்முடைய மனக்கவலையை இறைவனிடம் தெரிவிக்கலாம். நமது நல்ல தீர்வு கிடைக்கும். கொரோனாவிலிருந்து உலக நாடுகள் விடுபட யாகம் நடத்த வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இக்கோயிலில் ஜீவசமாதி உள்ளதால் பக்தர்களின் வேண்டுதலுக்கு வலிமை அதிகமாகும். நிச்சயம் கொரோனாவை வெல்வோம். -ஏ. செல்வராஜன், எஸ். தும்மலப்பட்டி.

ஆன்மிக வழிபாடால் உற்சாகம்: ஊரடங்கால் மூன்று மாதம் பக்தர்கள் வருகையின்றி பூஜைகள் மட்டும் செய்யப்பட்டன. இதனால் கோயில் களையிழந்தது. தற்போது அரசு அனுமதியளித்த நிலையில் பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை சுவாமி முன் சமர்ப்பிக்கும் பட்சத்தில் எண்ணங்கள் வலுப்பெறுகிறது. அவை நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையால் மனம் ஆறுதல் பெறுகிறது. கிராம கோயில்களில் வழிபாட்டுக்கு அனுமதித்தது மகிழ்ச்சி. எம்பெருமான் நாட்டு மக்களுக்கு நோய் நொடியில்லாத வாழ்வுக்கு அருள்புரிவார். பக்தர்கள் ஆன்மிக வழிபாட்டால் மனக்குறையின்றி உற்சாகமாக காணப்படுகின்றனர்.-சுரேஷ்குமார், இராமர் கோயில் பூசாரி, தாண்டிக்குடி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்
 
temple
 சென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்
 
temple
 ஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்
 
temple
சூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.