உசிலம்பட்டி: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டன. தற்போது அரசு கிராமப் பகுதிகளில் உள்ள சிறு வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கியது. நேற்று மாலை 5.00 மணியளவில் உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதேஷ்வரர் ஆலயம் திறக்கப்பட்டது. அர்ச்சகர் சூடம் ஏற்றி வழிபாடு நடத்திய பின் கோவில் கதவுகளை திறந்ததார். குறைவான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
அர்ச்சகர் சேகர்: வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பூசாரிகள் மட்டும் முக்கிய பூஜைகள் செய்து வந்தோம். தற்போது அரசு பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தக்க பாதுகாப்புடன் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாட்டில் கலந்துகொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார்.