திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நேற்று தேரோட்டதினத்தையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. திருநெல்வேலி, நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆனி தேரோட்ட விழா இந்த ஆண்டு கொர னாவால் ரத்துசெய்யப்பட்டது. இருப்பினும் கொடியேற்ற தினமான ஜூன் 25 துவங்கி நேற்று வரையிலும் தினமும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிசேக, அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. 9ம் நாளான நேற்று தேரோட்ட விழாவையொட்டி நேற்று உற்சவர்களுக்கு பூப்பந்தலுடன் சிறப்பு அபிசேக, அலங்கார, தீபாராதனையை மூர்த்தி பட்டர் செய்தார். 10ம் திருநாளான இன்று தீர்த்தவாரி விழா கோயிலுக்குள்ளாகவே நடக்கிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராமராஜா செய்திருந்தார்.