பதிவு செய்த நாள்
06
ஜூலை
2020
02:07
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் கொரோனா ஊரடங்கு காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை மக்களுக்காக தீட்சிதர்கள் சார்பில் வீடுகளுக்கு சென்று அன்னதானம் வழங்கி வருகின்றனர். இதன் 100 நாள் நிறைவை முன்னிட்டு சேத்தியாத்தோப்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாசல் பொது தீட்சிதர்கள் சார்பில் ராஜா தீட்சிதர் தலைமை தாங்கினார். தீட்சிதர் சிவசுப்ரமணியன், சிவக்குமார், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஜோதி குருவாயூரப்பன், மாவட்ட மேற்பார்வையாளர் தேவசரவணசுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார், மேலிட பார்வையாளர் சுவாமி கருடானந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் அப்துல்ரகுமான் அனைவரையும் வரவேற்றார்.
பா.ஜ., மேற்குமாவட்ட தலைவர் இளஞ்செழியன், தீட்சிதர்கள் அன்னதானம் வழங்கினர். இதில் மாவட்ட செயலர்கள் காந்திராஜ், ஜானகிசுகுமார், அலுவலக செயலாளர் நடன மூர்த்தி, மகளிரணி பழனியம்மாள், பாரங்கிப்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் கண்ணன், ஞானசேகர், ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.