மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா வடக்கு கண்ணாடிப்புத்தூர் பகுதியில் சிவலிங்க வடிவ கல்வெட்டு மற்றும் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மடத்துக்குளம் பகுதியில் ஆயிரம் ஆண் டுகளை, கடந்த,வரலாற்று சிறப்புமிக்க மிகப்பழமையான கோவில்கள் உள்ளன. சில கோவில்கள் இடிந்து புதையுண்டு போயுள்ளன. இப்படி அழிந்த கோவில்களின் சிதிலங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. வடக்கு கண்ணாடிப்புத்தூர் கயிலாயநாதர் கோவில் பகுதியில் லிங்க வடிவ கல்வெட்டு பராமரிப்பு இன்றி புதர்களுக்கு மத்தியில் தரையில் கிடக்கிறது.
இதை ஆய்வு செய்த ஜி.வி.ஜி., கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் கற்பகவல்லி மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறுகையில் " கரை வழி நாட்டு தொன்மையான கிராமங்களி ல் கண்ணாடிப்புத்தூர் ஒன்றாகும். இதன் முந்தைய பெயர் வீரபாண்டியசதுர்வேதி மங்கலம் என வரலாற்று தகவல் தெரிவி க்கிறது. இங்கு காணப்படும் சிவலிங்க வடிவ கல்வெட்டு மற்றும் எழுத்துகள் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை யை குறிக்கிறது. அன்றைய காலத்தில் இந்த கல்வெட்டுக்கள் நடப்பட்டிருந்த விளைநிலங்கள் சிவன் கோயிலுக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. விளையும் தானியங்கள், கோவில் பூஜைக்கும், பூஜை செய்வோரும் பயன்படுத்திக் கொள்ள உரிமையானது எனவும் இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. கோவிலுக்கு முன்புறம் காணப்படும் கல்வெட்டில் அவ்வூரில் வசித்த ஆனந்த ஈச்சுவரம் உடையார் இந்த கோவிலுக்கு திருவமுது செய்வதற்காக நெல் தானம் வழங்கியதையும் குறிப்பிடபட்டுள்ளது. பழமையான அழிந்துபோன கோவில் "திருவானந்திச்சுவரமுடையார்" ஆலயம் என கல்வெட்டு தகவல் உறுதி செய்கிறது " என தெரிவித்தனர்.