ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவில் தங்கத்தேரில் ஆண்டாள், ரெங்கமன்னாரை எழுந்தருள செய்து பக்தர்களின்றி தேரோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இக்கோயில் விழா ஜூலை 16ல் துவங்கி 24ல் தேரோட்டம் நடத்த வேண்டும். ஊரடங்கால் விழா நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இதனிடையே கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பூரத் திருவிழாவை பக்தர்களின்றி கோயிலுக்குள் நடத்தவும், ரதவீதிகளில் இழுக்கபடும் திருத்தேருக்கு பதில் கோயில் உட்பிரகாரத்தில் தங்கத் தேர் இழுக்கவும், இதை இணையதளம் மூலம் ஒளிபரப்பி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிகோரி அரசிற்கு கடிதம் அனுப்பபட்டு உள்ளது. நல்லமுடிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் கோயில் நிர்வாகத்துடன் பக்தர்களும் காத்திருக்கின்றனர்.