Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: அமோக லாபம் ரிஷபம்: சந்தோஷ சாரல் ரிஷபம்: சந்தோஷ சாரல்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மேஷம்: தொழிலில் வளர்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: தொழிலில் வளர்ச்சி

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
02:07

பொறுப்புடன் பணியாற்றும் மேஷ ராசி அன்பர்களே!


சுக்கிரன், குரு, ராகு தொடர்ந்து முன்னேற்றத்தை கொடுப்பார்கள். உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கும் புதன் ஜூலை 27ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். அதன்பிறகு அவரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.  வருமானம் கூடும். மனதில் துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுக்கிரனால் பொருளாதார வளம் பெருகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். ஜூலை 24க்கு பிறகு  பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.  உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். ஆக.12க்கு பிறகு  பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வர்.  உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஜூலை 26க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு  லாபத்துக்கு குறைவிருக்காது.  சனியின் 3ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். சகோதரர்கள் உறுதுணையாக செயல்படுவர்.

உடல்நிலை அதிருப்தியளிக்கும். ராசிக்கு 12ம் இடத்திலுள்ள செவ்வாயால் ஏற்பட்ட பணவிரயம், பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் ஆக.12க்கு பிறகு மறையும்.


சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ராகுவால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். புதனால் போட்டியாளர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன ஜூலை 26க்கு பிறகு மறையும். அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரத்தை சிறப்பாக நடத்தலாம். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
 தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வருமானத்தைக் காண்பர்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜூலை 30க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். ஜூலை 26க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஐ.டி., துறையினர் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் வந்து சேரும்.
* வக்கீல்கள் ஜூலை 26க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி அடைவர். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்கள் நன்மதிப்பு பெறுவர். சிலர் முக்கிய பொறுப்பு கிடைக்க பெறுவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடை இருக்காது.
* பொதுநல சேவகர்கள் மதிப்பு மரியாதையுடன் இருப்பர்.அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு சாதகமான காற்று வீசும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூல் பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. ஜூலை 26க்கு பிறகு பாசி பயறு, உளுந்து, கொண்டைக்கடலை, மஞ்சள், சோளம், பழ வகைகள் மூலம் வருமானம் உயரும்.
* கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை தொழில் மூலம் ஜூலை 26 க்கு பிறகு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். 


சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு ஆக.12 க்குப் பிறகு சிலர் தொழில் ரீதியாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை ஏற்படலாம்.
* தரகு,கமிஷன் தொழில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இருப்பினும் குருவின் 7 ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
* பணியாளர்கள் ஆக.12 க்கு  பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* மருத்துவர்கள் பிரதிபலன் எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.  சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர்
புதிய சொத்து  வாங்க அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
* அரசியல்வாதிகள் அதிக அக்கறையுடன் இருக்கவும். பெண்களிடம் விரோதம் ஏற்படும்.சற்று ஒதுங்கிஇருக்கவும்.
 
நல்ல நாள்: ஜூலை 19,20,25,26,27,28 ஆக. 3,4,5,6,10,11,15,16.
கவன நாள் ஜூலை 29,30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7  நிறம்: வெள்ளை, மஞ்சள்.

 பரிகாரம்:

* தினமும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம்
* செவ்வாயன்று முருகனுக்கு செவ்வரளி மாலை
* சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar