Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கும்பம்: திடீர் வருமானம் கும்பம்: திடீர் வருமானம் மேஷம்: தொழிலில் வளர்ச்சி மேஷம்: தொழிலில் வளர்ச்சி
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை)
மீனம்: அமோக லாபம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2020
21:44

இந்த மாதம் சுக்கிரன் மட்டும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். புதன் ஜூன் 20 வரையும், ஜூலை3 க்கு பிறகும் நன்மை தருவார். பொன், பொருள் சேரும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். எடுத்த முயற்சியில் தடைகள் குறுக்கிட்டாலும் அதை முறியடித்து விடுவீர்கள். குரு தற்போது 11ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் ஜூலை 8ல் அதிசார நிவர்த்தி அடைந்து, உங்கள் ராசிக்கு 10ம் இடத்திற்கு செல்கிறார்.

குரு பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் சுக்கிரனால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். குரு பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சகோதரர் ஆதரவால் நன்மை காண்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். புதிய பதவி வாய்ப்பு தேடி வரும். சுய தொழில் செய்யும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். உடல்நிலை அதிருப்தி அளிக்கும்.  பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள், விரயம் முதலியன ஜூன் 17க்கு பிறகு மறையும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். சுக்கிரனின் பலத்தால் அமோக லாபம் கிடைக்கும்.  வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும்.
* வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் கிடைக்கும்.  தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். .
* தனியார் துறை பணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த கோரிக்கைகள் பெருமளவில் நிறைவேறும்.
* ஐ.டி., துறையினருக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.
* வக்கீல்கள் ஜூலை 3க்கு பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்கள் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம். அதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். கோரிக்கைகளை ஜூலை 7 க்குள் கேட்டு பெறுவது நல்லது.
* பொதுநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும். சிலர் பதவி கிடைக்கப் பெறுவர்.
* கலைஞர்கள் செல்வாக்குடன் திகழ்வர். அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்கப்  பெறுவர்.
* விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். மஞ்சள், பயறு வகைகள் மூலம் வருமானம் உயரும்.
* பால்பண்ணை தொழில் கால்நடை செல்வம் பெருகும். சேமிக்கும் விதத்தில் லாபம் அதிகரிக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மறைமுகப்போட்டி குறுக்கிடலாம். ஜூன் 21 –  ஜூலை 3 வரை அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
* தரகு,கமிஷன் தொழில் தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
* மருத்துவர்கள் அயராது உழைக்க வேண்டியதிருக்கும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.
* அரசு பணியாளர்கள் ஜூன் 21 –  ஜூலை 3 வரை அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பொறுமை தேவை.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெறமுடியாது. பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* விவசாயிகள் வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

நல்ல நாள்: ஜூன் 15,19,20,26,27,28,29 ஜூலை 4,5,6,7,8,11,12,13.
கவன நாள்: ஜூன் 30, ஜூலை1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,8  நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:
* செவ்வாயன்று முருகப்பெருமான் வழிபாடு
* வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய்விளக்கு
* ராகுகாலத்தில் துர்கைக்கு செவ்வரளி மாலை

 
மேலும் ஆடி ராசிபலன் (16.7.2020 முதல் 16.8.2020 வரை) »
temple
பொறுப்புடன் பணியாற்றும் மேஷ ராசி அன்பர்களே! சுக்கிரன், குரு, ராகு தொடர்ந்து முன்னேற்றத்தை ... மேலும்
 
temple
தகுதியுடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே! பொருளாதார வளம் பெருகும் மாதம் இது அமையும். சூரியன், ... மேலும்
 
temple
பொறுமையில் சிறந்த மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் குருவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். ... மேலும்
 
temple
கடமையில் ஆர்வம் மிக்க கடக ராசி அன்பர்களே!  சனி, கேதுவால் தொடர்ந்து நற்பலனை எதிர்பார்க்கலாம். மற்ற ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே! குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். புதன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.