Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: பணப்புழக்கம் கன்னி: எதிர்பாராத வருமானம் கன்னி: எதிர்பாராத வருமானம்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
சிம்மம்: வளர்ச்சி மாதம்
எழுத்தின் அளவு:
சிம்மம்: வளர்ச்சி மாதம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
02:07

சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே!


குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். புதன் ஜூலை 26 வரையும், சுக்கிரன் ஜூலை 30க்கு பிறகும் நற்பலன் தருவார்கள்.  குடும்பப் பெண்களால் பல நன்மைகள் தேடி வரும். எனவே முக்கிய முடிவுகளை அவர்களின் வசம் ஒப்படையுங்கள். அது வெற்றிகரமாக முடியும். பொன், பொருள் சேரும். நண்பர்கள் உறுதுணையாக செயல்படுவர்.

குடும்பத்தில் புதனால் மாத முற்பகுதியில்  மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.  சுக்கிரனால் மாத பிற்பகுதியில் பணவரவு கூடும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். உங்கள் வளர்ச்சிக்கு சகோதரர்கள் பின்னணியாக இருப்பர்.


பெண்களுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் சேரும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருட்கள் கிடைக்கப் பெறலாம். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவியும் தேடி வரும்.  வியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானத்தைக் காண்பர்.  

உடல்நிலை அதிருப்தியளிக்கும். செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள்  ஆக.12க்கு பிறகு பூரண குணம் அடையும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.


சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு புதனால் ஜூலை 26 வரை பொருளாதார வளம் மேம்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும்.
* வியாபாரிகளுக்கு வளர்ச்சிக்கான மாதமாக அமையும்.  தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல்  வருமானம் கிடைக்கப் பெறுவர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். தங்கள் கோரிக்கைகளை ஜூலை 26க்குள் கேட்டு பெறுவது நல்லது.
* ஐ.டி. துறையினருக்கு உத்தியோகம் சிறப்படையும். திடீர் பணவரவு இருக்கும். புதிய பதவி கிடைக்கும்.
* ஆசிரியர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைபளு குறையும். திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும். மதிப்பும் கிட்டும்.
* கலைஞர்களுக்கு ஜூலை 30க்கு பிறகு எதிர்பார்த்த புகழ் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.
* விவசாயிகளுக்கு பாசிப்பயறு, உளுந்து, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூல் கிடைக்கப் பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.

* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.


 சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஜூலை 26க்கு பிறகு நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம். எனவே அவர்கள் மீது ஒரு கண் இருப்பது நல்லது.
* வியாபாரிகளுக்கு சூரியனால் விரயம் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வியாபார விஷயமாக யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
* தரகு, கமிஷன் தொழிலில் அதிக முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டியதிருக்கும்.
* அரசு பணியாளர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடையில்லை.
* தனியார் துறை பணியாளர்கள்  ஜூலை 26க்கு பிறகு திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
* மருத்துவர்களுக்கு வீண் அலைச்சல், பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு.
* வக்கீல்கள் ஜூலை 26க்கு பிறகு சுமாரான நிலையில் இருப்பர். சிலர் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் பிடிப்பு நிலை இல்லாத நிலை உருவாக இடமுண்டு.
* அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் குழப்பம் உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஏற்படலாம். அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
* பொதுநல சேவகர்களுக்கு கவுரவத்திற்கு பங்கம் வராது. எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம்.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது. வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்
   நல்ல நாள் ஜூலை 16,17,18,19,20,23,24,27,28 ஆக. 3,4,5,6,12,13,14,15,16
   கவன நாள் ஆக.7,8,9 சந்திராஷ்டமம்

  அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: மஞ்சள்,  நீலம்.


பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* செவ்வாயன்று முருகப்பெருமான் வழிபாடு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு விளக்கு

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar