Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: எதிர்பாராத வருமானம் விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி விருச்சிகம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
துலாம்: சொத்து யோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம்: சொத்து யோகம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
02:07

நேர்மையுடன் பணிபுரியும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் பல முன்னேற்றம் காணலாம். சூரியன், சுக்கிரன், சனி,கேது மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். செவ்வாய் ஆக. 12 வரையும், புதன் ஜூலை 26க்கு பிறகும் நன்மை தருவார்கள். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். சனி பகவான் முயற்சியில் வெற்றி, பொருளாதார வளம்,  தொழில் வளர்ச்சியை தந்து கொண்டிருக்கிறார். சூரியன், கேதுவால் நல்ல வளர்ச்சி காணலாம். சூரியனால் நினைத்தது நிறைவேறும். புதனால் ஜூலை 26க்கு பிறகு பெண்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும்.


குடும்பத்தில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள். ஆடம்பர வசதிகள்  பெருகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.  கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். வருமானம் உயரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அண்டை வீட்டாரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.  சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சம்பள உயர்வு, பதவி உயர்வு  தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உஷ்ணம் தொடர்பான  உபாதைகள் மறையும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலில்  தீயோர்சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஜூலை 26க்கு பிறகு விடுபடுவர். அதன்பின் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் உயரும்.
* வியாபாரிகள் கூடுதல் லாபம் காண்பர். ஆன்மிக சம்பந்தபட்ட பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர்.  பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கப் பெறுவர்.
* அரசு பணியாளர்களுக்கு அதிகாரிகளின் மத்தியில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.
* தனியார் பணியாளர்களுக்கு புதனால்  ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஜூலை 26க்கு பிறகு மறையும். அதன் பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* ஐ.டி., துறையினருக்கு அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* மருத்துவர்களுக்கு பணியிடத்தில் திறமை பளிச்சிடும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும்.
* வக்கீல்கள் ஜூலை 26க்கு பிறகு கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறுவர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். கோரிக்கைகளை ஆக.12க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கத்திற்கும் குறை இருக்காது.
* பொதுநல சேவகர்கள் நற்பெயர் கிடைக்கப் பெறுவர். புகழ், பெருமை வளர்முகமாகவே இருக்கும்.
* கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும்,
* விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், பழ வகைகள், சோளம், கேழ்வரகு, எள், கொள்ளு, துவரை போன்ற  பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டு. பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு.
பண்ணை தொழில் பசு வளர்ப்பு மற்றும் கோழி,ஆடு வளர்ப்பின் மூலம் நல்ல வருமானத்தை காணலாம்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 26 க்கு பிறகு அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை பக்கபலமாக அமையும்.
   
சுமாரான பலன்கள்
* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஜூலை 26 வரை  முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* ஆசிரியர்கள் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும்.
* அரசியல்வாதிகள் ஆக.12 க்கு பிறகு அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
   நல்ல நாள்: ஜூலை 21,22,23,24,27,28,31 ஆக. 1,2,7,8,9,10,11
   கவன நாள்: ஜூலை 16,17,18 ஆக.12,13,14 சந்திராஷ்டமம்
  அதிர்ஷ்ட எண்: 3,7,9 நிறம்: பச்சை,வெள்ளை

பரிகாரம்:

* வெள்ளிக்கிழமையில் நாக தேவதை வழிபாடு
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம்
* செவ்வாயன்று முருகப்பெருமானுக்கு விரதம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar