கந்தசஷ்டி கவசத்துடன் குன்றக்குடிக்கு பக்தர்கள் நடைபயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2020 06:07
காரைக்குடி: கருப்பர் கூட்டத்தை கைது செய்ய வலியுறுத்தி பள்ளத்துாரிலிருந்து குன்றக்குடிக்கு கையில் வேலுடன், கந்தசஷ்டி கவசம் பாடியவாறு பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி ஹிந்துக்கள் நம்பிக்கையை களங்கப்படுத்தி வரும் கருப்பர் கூட்டத்தைஉடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்கத்தினர், குன்றக்குடிக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர்.நேற்று காலை, பள்ளத்துாரில் தொடங்கிய நடை பயணத்தை பா.ஜ., தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். தேசிய ஊடகவியலாளர்கள் நலச்சங்க மாநில இணைச் செயலாளர் யோகநரசிம்மன் தலைமையில் நடந்த பயணத்தில், கந்தசஷ்டி கவசத்தை பாடியவாறும், முருகன் படத்தை ஏந்தியவாறும், கையில்வேலுடனும் பக்தர்கள் குன்றக்குடிக்கு நடந்து சென்றனர்.