சபரிமலையில் பக்தர்களின்றி ஆடி மாத பூஜைகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2020 09:07
சபரிமலை; சபரிமலையில் ஆடி மாத பூஜைகள் தொடங்கியது.
சபரிமலையில் இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்ட பின்னர் மாசி மாத பூஜைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆராட்டு விழா ரத்து செய்யப்பட்டது. பங்குனி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் இல்லாமல் ஆடி மாத பூஜைகள் நேற்று துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 7.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலவருக்கு அபிஷேகம் நடத்தினார். ஜூலை 20 இரவு வரை பூஜைகள் நடைபெற்று அன்று நடை அடைக்கப்படும்.