தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் ஒன்று கூடி இந்த விரதத்தை மேற்கொள்வர். உப்பில்லாத பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைப்பர். இந்த சமயத்தில் ஆண்கள் அருகில் இருப்பது கூடாது. பூஜையை தலைமையேற்று நடத்தும் வயதான சுமங்கலி, அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். முடிவில் வட்ட வடிவ பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் மாங்கல்யத்தை காட்டுவார். நீரில் தெரியும் பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகிலுள்ள சீதப்பால் அவ்வையார் அம்மன் கோயிலில் ஆடி செவ்வாயன்று சுமங்கலிகள் இந்த வழிபாட்டை நடத்துவர்.