மரணம் பற்றி ஒரு சாரார் சிந்திப்பதே இல்லை. சிலர் அது எப்போது வருமோ என பயப்படுகின்றனர். ஆனால் மரணத்திற்காக பயப்படுவதில் அர்த்தமில்லை என வாழ்ந்து காட்டியவர் மார்ட்டின் லுாத்தர். இவர் புராட்டஸ்டென்ட் இயக்கத்தின் தந்தை. கத்தோலிக்க சங்க உறுப்பினர்கள் பைபிள் கருத்துக்கு மாறாக இவர் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். இவரை விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் மார்ட்டின் லுாத்தருக்கு இளவரசர் மூன்றாம் பிரெட்ரிக் ஆதரவு அளித்ததால் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் போப் உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த, இளவரசர் ஆதரவை விலக்கிக் கொண்டார். அப்போது லுாத்தருக்கு நெருக்கமான சிலர்,‘‘இளவரசர் தங்களை கைவிட்டு விட்டார். இனி நீங்கள் யாரிடம் அடைக்கலம் தேடப் போகிறீர்கள்?’’ எனக் கேட்டனர். லுாத்தர் கலங்கவில்லை.‘‘ எப்போதும் பரலோகத்தையே என் புகலிடமாக வைத்திருக்கிறேன்’’ என பதிலளித்தார். மரணத்தைக் கண்டு பயப்படாதவர்களே மாமனிதர்கள்.