திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு மூலவர் சிவானந்தவல்லி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, நேற்று காலை மூலவர் சிவானந்தவல்லிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் சிவானந்தவல்லி, பூப்பாவாடை அலங்காரத்தில் அர்ச்சனை, ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. உற்சவமூர்த்தி ஊஞ்சல் சேவையில் எழுந்தருளினார். பக்தர்கள் யாருமின்றி சிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜையை நடத்தினர்.