பதிவு செய்த நாள்
18
ஜூலை
2020
12:07
மயிலாப்பூர், ஆடி வெள்ளியை முன்னிட்டு, கோவில் திறக்கப்படாததால், நுழைவு வாயிலில்,பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுதும், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. கோவிலுக்குள், பக்தர்களை அனுமதிக்காமல், அர்ச்சகர்கள் மட்டும், வழக்கமான பூஜைகளை செய்கின்றனர். பிரதோஷம் போன்ற முக்கிய பூஜைகள் மட்டும், இணையதளம் வழியாக பக்தர்களுக்காக ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஆடி மாதம் பிறந்தது. ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்றாலே, பெண் பக்தர்கள் அம்மன் கோவில்களில், பொங்கல் வைத்து, வழிபடுவது வழக்கம். ஆடி வெள்ளியை அடுத்து, மயிலாப்பூரில் உள்ள முண்டக கண்ணியம்மன் கோவில் முன், பக்தர்கள் வீட்டில் பொங்கல் வைத்து, கோவில் வாசலில் படைத்து, தீபம் ஏற்றி வழிபட்டனர். வழிபாடு நடத்திய வயதான பெண்மணி ஒருவர், கோபுர தரிசனம்; கோடி புண்ணியம் என, சொல்லி கோபுரத்தை தரிசித்தார்.