பதிவு செய்த நாள்
18
ஜூலை
2020
05:07
தர்மபுரி: ஆடி, முதல் வெள்ளியை முன்னிட்டு, இலக்கியம்பட்டி புற்று மாரியம்மன் கோவிலில், நேற்று திரளான பெண்கள் வழிபாடு நடத்தினர். தர்மபுரி அடுத்த செந்தில்நகரில், புற்றுகோவில் உள்ளது. ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, நேற்று ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்கள், புற்றில் பால் ஊற்றியும், முட்டையை உடைத்து ஊற்றியும் வழிபட்டனர். மேலும், மூன்று முறை புற்றை சுற்றி வந்து வழிபட்டு, நாகதேவதையை வழிபட்டனர். சிலர் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதேபோல், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் உள்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை, அபி?ஷக, அலங்காரங்கள் நடந்தன.