தியாகதுருகம்: ஆடி அமாவாசை தினத்தில் குலதெய்வம் கோவில்களில் பிரதான வாசல் முன்பு பக்தர்கள் வணங்கி சென்றனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம்.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கோயில்கள் மூடப்பட்டு பக்தர்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வளாகத்தில் உயிர்பலி இட, மொட்டை அடிக்க, காது குத்த, பொங்கல் வைக்கவும் அனுமதிக்கபடவில்லை. இந்நிலையில் ஆடி அமாவாசை என்பதால் பலர் தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாசல் முன்பு கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு சென்றனர். தியாகதுருகம் பகுதியில் உள்ள சித்தலூர் பெரியநாயகி அம்மன், வட பூண்டி மற்றும் வீ.பாளையம் பச்சையம்மன், புக்குளம் பெரியாண்டார், பட்டி முனீஸ்வரன் ஆகிய கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் வெளி வாசலில் நின்று வழிபட்டனர்.