பதிவு செய்த நாள்
21
ஜூலை
2020
01:07
மேட்டுப்பாளையம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் முன், பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
கோவை மாவட்டத்தில், அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இங்கு, தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் வந்து, சுவாமியை வழிபட்டு செல்வர். ஆடி அமாவாசை அன்று, ஏராளமான பக்தர்கள், பவானி ஆற்றில் குளித்து, அம்மனை வழிபட்டு வழிபடுவது வழக்கம். மேலும் புதுமண தம்பதிகள், கோவிலில் அம்மன் முன்பாக, தாலி கயிறு பிரித்து கட்டி, அம்மனை வழிபட்டுச் செல்வர்.