Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நளதமயந்தி பகுதி-5 நளதமயந்தி பகுதி-7 நளதமயந்தி பகுதி-7
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-6
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜன
2011
03:01

மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் உயர்ந்தவள் இந்த உலகில் யாருண்டு! கவலை கொள்ளாதே! உடனே நிடதநாடு நோக்கி பறக்கிறேன். உன் உள்ளம் கவர் கள்வனிடம் உன் காதலைத் தெரிவித்து விடுகிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக பறந்தது.தமயந்தி தன் காதல் நிறைவேறுமோ அல்லது ஏதேனும் இடைஞ்சல் வருமோ என்ற கவலையிலும், நளனை எப்போது காண்போமோ என்ற ஏக்கத்திலும் முகம் வாடியிருந்தாள். அப்போது அவளது தோழிகள் வந்தனர்.அவர்களுக்கு ஆச்சரியம்! எப்போதும் மலர்ந்த தாமரை போல் இருக்கும் நம் இளவரசியின் முகம், சூரியன் அஸ்தமான பின் வாடித் தொங்கும் சூரியகாந்தி போல் மாறியது ஏன் என்று புரியாமல் தவித்தார்கள். உடல்நிலை சரியில்லையோ! அவர்களுக்கு கலக்கம்.உடனே அவர்கள் அரசியிடம் ஓடினார்கள். மகாராணி! நம் இளவரசியார் நந்தவனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது முகம் என்றுமில்லாத வகையில் வாடிப்போய் உள்ளது. நாங்கள் காரணம் ஏதும் கேட்கவில்லை. தங்களிடமே சொல்லிவிடலாம் என விரைந்து வந்தோம், என்றனர். பெற்றவளுக்கு இதைக்கேட்டு பதட்டம். கையோடு தன் கணவன் வீமராஜனிடம் ஓடினாள். விஷயத்தைச் சொன்னாள். மன்னனுக்கோ மகள் மேல் கொள்ளைப் பாசம். இருவருமாய் இணைந்து நந்தவனத்துக்கு ஓடி வந்தனர்.மகளின் தலையைக் கோதிய தாய்,தமயந்தி, வா! அரண்மனைக்குச் செல்லலாம். உன் முகத்தில் என்ன வாட்டம்? எனக் கேட்டாள். உடம்பைத் தொட்டுப் பார்த்தாள். சூடு ஏதும் தெரியவில்லை.அரசனும்,அரசியும் அவளை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர். உள்ளே சென்றதும், அவள் தன்தந்தையின் காலடிகளில் விழுந்தாள்.

மகளே! உனக்கு என்னாயிற்று! திடீரென ஏன் இப்படி காலில் விழுகிறாய்? என்றான். அவளிடமிருந்து பதிலேதும் இல்லை. பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது. அவளது முகம் வியர்த்திருந்தது.வீமராஜனுக்கும், அவன் மனைவிக்கும் ஓரளவு புரிந்து விட்டது. இது இளவயது வியாதி தான் என்று! இருவரும் அவளை படுக்க வைத்து, சேடிப்பெண்களை அழைத்து மயிலிறகால் விசிறும்படி உத்தரவிட்டு, தங்கள் அறைக்குச் சென்றனர். அன்பரே! நம் பெண்ணின் மனநிலை நமக்கு புரிந்துவிட்டது. அவளுக்கு சிறந்த மணாளனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதை அவள் நமக்குச் சொல்லாமல் சொல்லியிருக்கிறாள். நமக்கு ஒரே செல்ல மகள். அவள் விரும்பும் கணவன் அமைய வேண்டுமே! எல்லா நாட்டு மன்னர்களுக்கும் ஓலை அனுப்புவோம். சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்வோம். நம் அன்புப் பெண்ணுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவனை அவளே தேர்வு செய்து கொள்ளட்டுமே, என்றாள்.சரியான யோசனை சொன்னாய். உடனடியாக ஏற்பாடு செய்து விடுகிறேன், என்றவன், பலநாட்டு மன்னர்களுக்கும் தகவல் அனுப்பினான். என் குமாரத்தி தமயந்திக்கு திருமணம் செய்ய உத்தேசித்துள்ளேன். அவள் விரும்பும் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்  வகையில், சுயம்வரம் நடத்தப்படும். இன்னும் ஏழே நாட்கள். அடுத்த வாரம் சுயம்வரம், என்று அந்தந்த நாடுகளுக்குச் சென்று அறிவிக்கும்படி தூதர்களை அனுப்பினான். தன் நாட்டு மக்களுக்கு இளவரசிக்கு சுயம்வரம் நடக்கும் விபரத்தை முரசறைந்து தெரிவித்தான். மக்கள் மகிழ்ந்தனர். தமயந்தியின் சுயம்வர விபரமறிந்த மன்னர்கள் மகிழ்ந்தனர். அவள் தனது மனையாட்டியனால் அதை விட உயர்ந்த யோகம் தங்களுக்கு ஏதுமில்லை என அவர்கள் எண்ணினர். ஏழுநாட்கள் என்று அறிவித்திருந்தாலும் கூட, அதற்கு முன்னதாகவே விதர்ப்பநாடு வந்து சேர்ந்தனர்.

இந்த சமயத்தில், தமயந்தியிடமிருந்து தூது சென்ற அன்னம் நளமகராஜனின் இல்லத்தை அடைந்தது. அவன் போர்க்களத்தில் வீரத்திருமகன். வாளால் பருந்துகளுக்கும், கழுகுகளுக்கும் விருந்து வைப்பவன். அதாவது, எதிரிகளை மாய்த்து அவர்களது உடலை அவற்றுக்கு கொடுப்பவன். அப்படிப்பட்ட வீரத்திருமகன், இந்த காதல் விஷயத்தில் சோர்ந்து கிடந்தான். அன்னம் வந்து சேர்ந்ததும் ஆவலுடன் அதனருகே அமர்ந்து கொண்டான்அன்னங்களின் தலைவனே! நீ என் தமயந்தியைப் பார்த்தாயா? அவள் என்ன சொன்னாள்? நிச்சயமாக சம்மதித்திருப்பாளே! உம்...அங்கே என்ன நடந்தது? நான் அவளைப் பார்க்காமலே ஏற்றுக்கொண்டது போல, அவளும் என் காதலை ஏற்றாளா? என்றான் அவசரமும் படபடப்பும் கலந்து! அவனது அவசரத்தைப் புரிந்து கொண்ட அன்னம்,உன்னையும் அவள் ஏற்றாள். உன் பெருமையை உணர்ந்து கொண்டாள். கண்டதும் காதல் கொள்வதே உலகில் இயல்பு. நீங்களோ காணாமலே காதல் கொண்டீர்கள். காதலுக்கு மட்டும் தான் இத்தகைய சக்தி இருக்கிறது<, எனறது.நளன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த வேளையில், நிடதநாட்டுக்கு வீமராஜன் அனுப்பிய தூதுவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் வாயில்காவலர்களிடம், தங்கள் வந்த காரணத்தைக் கூறினர். காவலர்கள் நளனிடம் இதுபற்றி அறிவிக்க, நளன் அவர்களை அழைத்து விஷயத்தைத் தெரிந்து கொண்டான். உடனே புறப்பட்டு வருவதாக உங்கள் ராஜாவிடம் சொல்லுங்கள், என அவர்களை அனுப்பிவிட்டு, தேரைக் கொண்டு வர சொன்னான். சாரதியிடம்,விதர்ப்பநாடு நோக்கி விரைந்து செல், என உத்தரவிட்டான். படைவீரர்கள் புடைசூழ விதர்ப்பநாட்டை அடைந்தான்.  இப்போதெல்லாம் திருமணத்துக்கு மணப்பொருத்தம் பார்க்கிறார்கள். நளன் எப்படி பொருத்தம் பார்த்தான் தெரியுமா? தங்கம் போல் மின்னும் நெல்மணிகள் கொத்துக் கொத்தாக குலுங்கும் கதிர்களையுடைய வயல்சூழ்ந்த நாடு தன்னுடையது. விதர்ப்பநாடோ, குவளைக் கொடியில் பூத்துள்ள மலர்களில் இருந்து சிந்தும் தேன் வயல்களை நிறைத்து சகதியாக்க, அதில் செந்நெல் கதிர்கள் விளைந்த செழிப்பைக் கொண்டதாம்.ஆஹா! இரு நாடுகளுமே செழிப்பில் குறைந்தவையல்ல. மிகுந்த பொருத்தம் தான், என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.இங்கே இப்படியிருக்க, இந்திரலோகத்திற்கு சென்றார் நாரத முனிவர்.

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-1 டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-2 டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-4 டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar