Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூட்டிய கோயிலில் வெளியே நின்று ... பூரநாளில் பூப்புனித நீராடல் பூரநாளில் பூப்புனித நீராடல்
முதல் பக்கம் » துளிகள்
குறை தீர்க்கும் குங்குமக்காளி!
எழுத்தின் அளவு:
குறை தீர்க்கும் குங்குமக்காளி!

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2020
05:07

சிவனுடன்  போட்டி நடனமிட்ட பார்வதி, கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லைக்காளியாக அருள்பாலிக்கிறாள். குங்கும அர்ச்சனை செய்தவருக்கு குறை தீர்ப்பவளாகத் திகழ்கிறாள்.   


சிவ, பார்வதி இடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என வாக்குவாதம் ஏற்பட்டது. ‛நானே உயர்ந்தவள்’ என வாதிட்டாள் பார்வதி. ‛‛சரி...நீயே உயர்ந்தவளாக இரு!’’ என்ற சிவன் அவளை உக்கிர காளியாக மாற்றி விட்டார். தாயுள்ளம் கொண்ட தனக்கு கோபம் வரும்படி ஆகி விட்டதே என வருந்திய பார்வதி விமோசனம் கேட்டாள். அதற்கு சிவன்,‘‘நீ வருந்த வேண்டாம். உலக நன்மை கருதி நடந்த திருவிளையாடலே இது. அரக்கர்களால் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ அவர்களை அழிக்க வேண்டும். பின், சிதம்பரத்திற்கு வந்து என்னை நோக்கி தவமிரு.  ஆனந்த நடனம் ஆட நடராஜர் என்ற பெயர் தாங்கி அங்கு வருவேன். அப்போது சிவகாமி என்ற  பெயருடன் என்னை அடைவாய்,’’என்றார். அதுவரை ‘தில்லைக்காளி’ என்ற பெயரில் சிதம்பரத்தில் அமர்ந்தாள்.

 சிவனுக்கும், பார்வதிக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவன் ஒருகாலைத் துாக்கி ‘ஊர்த்துவ தாண்டவர்’ என்ற பெயரில் தாண்டவம் ஆடினார்.  ஆனால் பெண்மைக்குரிய நாணத்தால் அவளால் இயலவில்லை. இதனால் தோற்றாள். இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளை அமைதிப்படுத்த விரும்பிய பிரம்மா, ‛வேதநாயகி’ எனப் புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் உருவத்தை மாற்றும்படி  வேண்டினார். அவளும் ‘பிரம்ம சாமுண்டீஸ்வரி’ என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள்.  நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக இந்த அம்மனுக்கு சன்னதி இங்குள்ளது.              


 கேட்ட வரம் கிடைக்க  தில்லைக்காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம், வெள்ளை வஸ்திரம் அணிவித்தல், குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். ஞாயிறன்று ராகு காலம், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்திற்கு அதிதேவதை என்பதால், மகத்தில் பிறந்தவர்கள் இங்கு அதிகளவில் வழிபடுகின்றனர்.             

தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் ‘கடம்பவன தக்ஷணரூபிணி’ என்ற பெயரில் அருள்கிறாள். விரிந்த கூந்தலுடன்  கல்லால மரத்தடியில் அமர்ந்திருக்க, அருகில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்கள் உள்ளனர். நின்ற கோலத்தில் சரஸ்வதி ‘வீணை வித்யாம்பிகை’ என்னும் பெயரில் அருள்கிறாள்.         

  

எப்படி செல்வது: சிதம்பரத்தில் இருந்து கடலுார் செல்லும் வழியில் ஒரு கி.மீ.
விசேஷ நாட்கள்: ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை, நவராத்திரி, மகாசிவராத்திரி             
நேரம்: காலை 6.30 –12:00, மாலை 4.30 – இரவு 8.30 மணி.            
தொடர்புக்கு: 04144 – 230 251      

 
மேலும் துளிகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar