பதிவு செய்த நாள்
28
ஜூலை
2020
01:07
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி, சுகவீனமாக இருப்பதாக தகவல் பரவிய நிலையில், நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில், 28 வயதுடைய பெண் யானை கல்யாணியை ரவிக்குமார், 40, ராம்ஜிகுமார், 27, என்ற பாகன்கள் பராமரிக்கின்றனர்.இந்நிலையில், பாகன் ரவிக்குமார் வசித்த குடியிருப்பு, ஸ்வீடன் நாட்டில் இருந்து வந்த நபரால், கொரோனா தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.அதையடுத்து, சமூக வலைதளங்களில் கல்யாணி யானை, நலமின்றி பல நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, விஷமிகளால் தவறான தகவல் பரப்பப்பட்டது.அதையடுத்து, நேற்று காலை, 8:00 மணியளவில், கால்நடை மருத்துவ குழுவினர் யானையை பரிசோதித்தனர். அதில், கல்யாணி யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது.கால்நடை மருத்துவர் மகாலிங்கம், கல்யாணி யானை, 4,455 கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. வழக்கமான பணிகளை செய்து வருகிறது, என்றார்.தலைமை பாகன் ரவிக்குமாரை தொடர்பு கொண்ட போது, நான் வசிக்கும் பகுதி, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால், தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது, என்றார்.