பதிவு செய்த நாள்
28
ஜூலை
2020
02:07
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. அம்மை நோய் வந்தவர்களை தங்க வைக்க, கோவில் வளாகத்தில் திறந்தநிலை வளாகம் ஒன்று உள்ளது. அதில், பிரதிஷ்டை செய்ய, சிமென்ட் கொண்டு செய்த முருகன், வள்ளி, தெய்வானை, கருமாரியம்மன் ஆகிய சிலைகள் இருந்தன. நேற்று முன்தினம் இரவு, மேலாளர் ரவிச்சந்திரன், 50, கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் திறந்தவெளி மண்டபத்தில் பிரதிஷ்டை செய்ய வைத்திருந்த, நான்கு சிலைகளின் கை பகுதி சேதப்படுத்தி இருந்தது தெரிந்தது. அதேபோல அருகில் உள்ள கன்னிக்கோவில் வளாகத்தில் தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் ஆகியவற்றை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். புகாரின்படி வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, ஹிந்து முன்னணி சார்பில், நகர பொதுச் செயலாளர் மோகன் தலைமையில், கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.