கன்னிவாடி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகள்தோறும் விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்த ஹிந்து அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாட, தற்போதைய ஊரடங்கு சூழலில் வாய்ப்பில்லை. இதனால் கன்னிவாடி பகுதியில் வீடுதோறும் விநாயகர் சிலை வழிபாட்டுக்கு ஹிந்து அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். வழிபாடு, ஊர்வலம் இல்லாவிடினும், வரும் ஆக.22ல், ஒவ்வொரு வீட்டின் முன்பும் சிலை அமைத்து விழா நடத்தப்பட உள்ளது. அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமின்றி ஏழை, நடுத்தர மக்களுக்கும் சிலைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒன்றரை அடி உயரத்தில் ஆயிரம் சிலைகள் அமைக்க இடங்களை தேர்வு செய்துள்ளனர். சமூக விலகல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சதுர்த்தி விழா நடத்தப்பட உள்ளது.