அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும்?: மாதிரி படங்கள் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2020 07:08
அயோத்தி: நாளை (ஆக.,05) பூமி பூஜை நடக்கவுள்ள ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பது போன்ற மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை (ஆக.,05) நடைபெற உள்ளது. இதற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை காலை சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து அவர் ராமர் கோயில் வளாகத்தில் உள்ள ராமரை தரிசித்துவிட்டு விழா மேடைக்கு செல்கிறார். பின்னர் 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கலை அடையாளமாக எடுத்து வைத்து பூமி பூஜையை துவக்கி வைக்கிறார். இந்நிலையில், ராமர் கோயிலின் வடிவமைப்பு இன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் கூடிய மூன்று மாடி அமைப்பு கொண்டதாக கோயில் உள்ளது. நாகரா பாணி கட்டடக்கலையில் இந்த கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் உயரம் 141 அடியில் இருந்து 161 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு வெளியிட்ட கோயிலின் தோற்றம் பிரமாண்டமாக காட்சி தருவதாக பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.