Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோயில் எப்படி ... அயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி அயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி
முதல் பக்கம் » ஆன்மிகபூமி அயோத்தி » தகவல்கள்
பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது: பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது: பிரதமர் மோடி

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
12:08

அயோத்தி : அயோத்தியில், இந்தியா, இன்று, ஒரு தங்க அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது. பல நுாற்றாண்டுகளின் காத்திருப்பு, இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. ராமர் கோவில், நம் பக்தியின் அடையாளமாக, நம் தேசிய உணர்வாக, இந்தியாவின் தேசிய கலாசாரத்தின் சின்னமாக திகழும், என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அயோத்தியில், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின், பிரதமர் மோடி, ஜெய் ஸ்ரீராம் என கூறி பேசினார். அவர் பேசியதாவது: ஸ்ரீராமர் மற்றும் சீதாதேவியை வணங்கி, உரையை துவக்குகிறேன். இன்று இந்தியா முழுதும், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் தான் கேட்கிறது.உலகம் முழுதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளில், எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சரயு நதிக்கரையில், வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நிறைவேறி உள்ளது.

தியாகம்: இந்த தருணம் வரும் என, கோடிக்கணக்கான மக்கள் நம்பவில்லை. பல ஆண்டு காத்திருப்பு, இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு, இன்று நிறைவேறியுள்ளது. கோவிலுக்காக பல தலைமுறையினர் தியாகம் செய்துள்ளனர். பலர், தங்களது உயிரை தியாகம் செய்து, ராமர் கோவிலுக்காக போராடியுள்ளனர். அவர்களுக்கு, 130 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பல தசாப்தங்களாக, ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த குழந்தை ராமருக்கு, இப்போது தான் ஒரு கோவில் கிடைக்க போகிறது. ராம ஜென்ம பூமியில், பல நுாற்றாண்டுகளாக, கட்டுவதும், இடிப்பதுமாக நடந்து கொண்டிருந்த சுழற்சியில் இருந்து, ராம பிரான் இன்று விடுபடுகிறார். கன்னியாகுமரி முதல், காஷ்மீர் கீர் பவானி வரை; கோடேஷ்வர் முதல், காமக்யா வரை; ஜெகந்நாத் முதல், கேதார்நாத் வரை; சோம்நாத் முதல், காசி விஸ்வநாத் வரை, இன்று நாடு முழுதும், ராம பக்தியில் மூழ்கியுள்ளது.

இந்த கோவில் கட்டப்படுவதன் மூலம், வரலாறு படைக்கப்படுவது மட்டுமல்ல, வரலாறு திரும்புகிறது என்பதும் உண்மை. அயோத்தியில், இந்தியா, இன்று, ஒரு தங்க அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது. பல நுாற்றாண்டுகளின் காத்திருப்பு, இன்று முடிவுக்கு வருகிறது. ராமர் கோவில், நம் பக்தியின் அடையாளமாக, தேசிய உணர்வாக, தேசிய கலாசாரத்தின் சின்னமாக திகழும். இந்தக் கோவில், கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தியை குறிக்கும்.

ஆக., 15ம் நாள், லட்சக்கணக்கான இந்தியர்களின் தியாகத்தை குறிக்கிறது. அதேபோல், ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் போராடி உள்ளனர். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம், அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஸ்ரீராமரின் இருப்பையே, பலர் கேள்விக்கு உள்ளாக்கிய நிலையில், நம் கலாசாரத்தின் அடித்தளமாக, ஸ்ரீராமர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ரீராமர் கோவில், நம் கலாசாரம், காலவரையறைகளை கடந்த நம்பிக்கை, தேசிய உணர்வு, கூட்டு மன உறுதி ஆகியவற்றின் நவீன அடையாளமாக இருந்து, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

வெற்றி: இந்த நாள், கோடிக்கணக்கான ராம பக்தர்களின் நம்பிக்கைக்கும், உறுதிக்கும் கிடைத்த வெற்றியின் சாட்சியாக இருக்கும். கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த போது, அனைவருடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், அனைத்துத் தரப்பு மக்களும் காட்டிய கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அதேபோன்ற கண்ணியமும், கட்டுப்பாடும், இன்றைக்கும் காணப்படுகிறது.

ஸ்ரீராமரின் வெற்றி, கோவர்த்தன மலையை துாக்கிய ஸ்ரீகிருஷ்ணர், சத்ரபதி சிவாஜி சுயராஜ்யத்தை ஏற்படுத்தியது, சுதந்திரப் போராட்டத்தை காந்திஜி முன்னின்று நடத்தியது போன்ற சிறப்புக்குரிய விஷயங்களில், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் முக்கியமான பங்கு வகித்துள்ளனர்.

அதேபோல, சாதாரண குடிமக்களின் உதவியுடனும், பங்களிப்புடனும், ராமர் கோவில் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. ராமர் பாலத்திற்கு கற்கள் வந்தது போல், ராமர் கோவில் கட்டவும் மணல், செங்கல், புனித நீர் வந்துள்ளது.ஸ்ரீராமரின் வாழ்வில், நமக்கு உத்வேகம் தராத செயல்பாடு எதுவுமே கிடையாது. நாட்டின் கலாசாரம், தத்துவம், நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பல அம்சங்களில், அவருடைய தாக்கத்தைக் காண முடிகிறது. தமிழில் கம்ப ராமாயணம் உள்ளது போல், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளிலும், ராமாயணம் எழுதப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற வகையில், அதை இணைக்கும் பொது நுாலாக, ராமர் இருக்கிறார்.

ஒளி விளக்கு: ஆதி காலத்தில், வால்மீகி ராமாயணத்தின் மூலமும், இடைக்காலத்தில், துளசிதாசர், கபீர், குருநானக் ஆகியோர் மூலமாகவும், அஹிம்சை, சத்தியாகிரகம் ஆகியவற்றின் சக்தியாகத் திகழ்ந்த காந்தியடிகளின் பஜனைகளிலும், ஸ்ரீராமர், மக்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்ந்தார். ராமருடன், புத்த பகவானும் தொடர்புடையவர். அயோத்தி நகரம், பல நுாற்றாண்டுகளாக சமணர்களின் நம்பிக்கை மையமாக இருந்து வந்தது. பல்வேறு நாடுகளில், மக்கள், ஸ்ரீராமரை வழிபடுகின்றனர். அதிக அளவில் இஸ்லாமியர்களைக் கொண்ட நாடான இந்தோனேஷியா மற்றும் கம்போடியா, லாவோஸ், மலேஷியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில், ராமாயணம் புகழ் பெற்று விளங்குகிறது.

மகிழ்ச்சி: ஸ்ரீராமரைப் பற்றிய குறிப்புகள், ஈரான், சீனா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. இந்த நாடுகள் அனைத்தையும் சேர்ந்த மக்கள், ராமர் கோவில் கட்டுமானம் இன்று துவங்குவதைப் பார்த்து மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.மஹாத்மா காந்தி, ராம ராஜ்யம் அமைய, கனவு கண்டார். தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பது அனைவரின் கடமை; தாய்நாடு சொர்க்கத்தை விட மேலானது; ஒரு நாட்டின் அதிக ஆற்றல், மென்மேலும் அமைதியை நிலைநாட்டுவது என்பது உள்ளிட்ட ராமரின் போதனைகள், நாட்டை தொடர்ந்து வழிநடத்தி வருகின்றன. ஸ்ரீராமரின் இந்த லட்சியங்களைப் பின்பற்றி, நாடு முன்னேறி வருகிறது. பரஸ்பர அன்பு மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் மீது கோவில் கட்டப்பட வேண்டும். உலகம் முழுதும் இருந்து பக்தர்கள் வர உள்ளதால், அயோத்தி வளர்ச்சி அடைய உள்ளது. இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

கொரோனாவை மறக்காத பிரதமர் பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டு விழாவிலும், கொரோனா பரவலை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்தினார். அவர் பேசுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடந்த இந்த விழா, மற்ற விழாக்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. நாம் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் தாரக மந்திரமாக ஏற்று கொண்டால், கொரோனாவை விரட்டி விடலாம் என்றார்.

கம்ப ராமாயண வரிகளை கூறிய பிரதமர்: அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, காலம் தாழ் ஈண்டு இனும் இருத்தி போலான் என்ற கம்ப ராமாயணத்தின் புகழ் மிக்க வரிகளை குறிப்பிட்டார். காலதாமதம் இல்லாமல், நம் கடமைகளை செய்ய வேண்டும் என, ராமர் கூறுகிறார். அவர் சொல்படி நாம் நடக்க வேண்டும் என, பிரதமர் மோடி கூறினார்.

சபதத்தை நிறைவேற்றினார்: கடந்த, 1992ல் அயோத்தி சென்ற மோடி, ராமர் கோவில் கட்டப்படும் போது தான் மீண்டும் வருவேன் என, உறுதி ஏற்றிருந்தார். அந்த சபதம், 28 ஆண்டுகளுக்குப் பின், தற்போது நிறைவேறியுள்ளது.

கடந்த, 1990களில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பா.ஜ.,வின் மிகப்பெரிய இயக்கமாக இருந்தது. கடந்த, 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீதான வழக்கு தற்போதும் நடந்து வருகிறது.

கடந்த, 1992ல், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரி, முரளி மனோகர் ஜோஷி, யாத்திரை மேற்கொண்டார். அந்த யாத்திரையின் ஒருங்கிணைப்பாளராக, மோடி இருந்தார். அப்போது, அவர்அயோத்திக்கு சென்றிருந்தார்.அந்த சமயத்தில், ராமர் கோவில் கட்டப்படும் போது தான், அயோத்திக்கு மீண்டும் வருவேன் என, மோடி உறுதி எடுத்திருந்தார். தற்போது, 28 ஆண்டுகளுக்குப் பின், அவருடைய சபதம் நிறைவேறியுள்ளது. மேலும், ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு நீக்கப்பட்டது. நேற்றுடன், ஓராண்டு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளில், தேர்தல் பிரசாரம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, உத்தர பிரதேசத்துக்கு மோடி சென்றுள்ளார். ஆனால், அயோத்திக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.அயோத்திக்கு பயணம் மேற்கொண்ட முதல் பிரதமர், அங்குள்ள ஹனுமான் கோவிலுக்கு வந்த முதல் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.

 
மேலும் ஆன்மிகபூமி அயோத்தி தகவல்கள் »
temple news
பட்டாபிஷேகத்திற்கு முதல் நாள் அயோத்தியிலுள்ள ரங்கநாதரை தரிசிக்க ராமனும், சீதையும் சென்றனர். அதாவது ... மேலும்
 
temple news
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நெருங்கிவரும் நிலையில் ஜடாயுவின் பிரமாண்டமான சிற்பம் ... மேலும்
 
temple news
அயோத்தி; வரும் 22ல் நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேத்துக்காக அயோத்தி மாநகரமே திருவிழாக் கோலம் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, வரும் 22ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயிலில் உள்ள வசதிகள் குறித்து அறக்கட்டளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar