Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ஆடி வெள்ளி தரிசனம்: பக்தர்களை காக்கும் பண்ணாரி மாரியம்மன் ஆடி வெள்ளி தரிசனம்: பக்தர்களை ...  ராமர் கோயிலுக்காக சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை ராமர் கோயிலுக்காக சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளியில் கண் திறக்கும் துள்ளுமாரியம்மன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
09:15

பாண்டியன்நகர்: விருதுநகர் பாண்டியன் நகரில் பிரசித்தி பெற்ற துள்ளுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் இருக்கும் குழந்தை மாரியம்மன் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி கடைசி வெள்ளியில் மட்டும் கண் திறந்து தரிசனம் தருகிறாள். அதே போல் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே படப்பு பூஜையும் நடக்கிறது. இதில் நாட்டுக்கோழி கறி , கருவாடு, முட்டை, கொழுக்கட்டை, துள்ளுமாவு, அவல், பொரி, கடலை, பானகம், இளநீர், பழ வகைகள், மாவிளக்கு ஏற்றி அகத்தி கீரையுடன் சக்தி கிடாய் பலியிட்டு பூஜைகள் நடக்கும். படப்பு பூஜை முடிந்த பின் கோயில் பூசாரி மேல் அம்மன் இறங்கி ஒருவரை மட்டும் அழைப்பாள்.

அவருக்கு மஞ்சள் நீர் ஊற்றி வேப்பஞ்சேலை சுற்றி மாலைகள் அணிவிக்கப்படும். அவர் மீது அம்மன் இறங்கி அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் சென்று மீண்டும் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சியும் நடக்கும்.இதன்பின் பக்தர்களுக்கு கறிவிருந்து வழங்கப்படும். ஆடி கடைசி வெள்ளி அடுத்து வரும் ஞாயிறு அன்று பக்தர்கள் பால்குடம் சுமந்து பாகுபாடின்றி கருவறைக்குள் சென்று அனைவரும் தங்கள் கைகளாேலயே அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஆடி மாதம் பிறந்தது முதலே பக்தர்கள் மஞ்சள் பாசிமணி மாலை அணிந்து 3,5,7,21 நாட்கள் என விரதம் இருப்பர். இதோடு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம், திருமண தடை, தீராத நோய்கள், மாணவர்கள் கல்வி, பருவமழையுடன் விவசாயமும் செழிக்கும் என்பது நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள வெங்கடாசலபதி சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி மாத ... மேலும்
 
temple
திருப்பதி: திருப்பதி, திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும். இந்த ... மேலும்
 
temple
 வேப்பூர்: புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, நல்லூர் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple
டேராடூன்: உத்தரகண்டில், அடுத்த ஆண்டு நடைபெறும், ஹரித்வார் கும்பமேளாவில், கொரோனா பாதிப்பால் பக்தர்கள் ... மேலும்
 
temple
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் ஸ்ரீ வாராகி மந்த்ராலயம் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.