மதுரை: கந்த சஷ்டி கவசத்தை யுடியூப் சேனலில் சிலர் இழிவுபடுத்தினர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாளை (ஆக.9) மாலை 6:00 மணிக்கு அனைத்து ஹிந்துக்களும் வீடுகளில் விளக்கு ஏற்றி, கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பு செயலாளர் பா.சுடலைமணி கேட்டுக் கொண்டுள்ளார்.