Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோகுலாஷ்டமி: உடுமலை சீனிவாச ... விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் தயாரிப்பு தீவிரம் விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவு: திருப்புகழ் மதிவண்ணன்
எழுத்தின் அளவு:
வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவு: திருப்புகழ் மதிவண்ணன்

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
11:08

சென்னை : வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவை குறிப்பது என ஆன்மிக பேச்சாளர் திருப்புகழ் மதிவண்ணன் கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழ் மொழியின் சிறப்பு வேல். இலக்கணப்படி பார்க்கையில் முதல்நிலை நீண்ட தொழிற்பெயர். வேலுக்கு பூஜை செய்வது குறித்து சிலப்பதிகாரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு சாட்சியே தமிழ் பாடல்கள் தான். முதல் கடவுள் வணக்கமே திருமுருகாற்றுப்படை தான். பிறகு கந்தபுராணம் திருப்புகழ் கந்தசஷ்டி கவசம் என நீள்கிறது. முருகப்பெருமானுக்கு எல்லாமே ஆறு தான். கந்தபுராணம் ஆறு பகுதி வளர்த்த கார்த்திகை பெண்கள் ஆறு முருகனின் முகங்கள் ஆறு. அருணகிரிநாதர் நாவில் முருகன் வேல் கொண்டு எழுதினார். அதன்பின் அவர் எழுதிய பாடல் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் புகழை சேர்க்கிறது. இப்படி ஒரு பாடலை எந்த மொழியிலும் பார்க்க முடியாது. அந்த பாடலில் அருணகிரிநாதர் வலதுபுறம் இடதுபுறம் முன்னும் பின்னும் காக்க வேண்டும் என பாடியிருக்கிறார். அதுதான் கந்தசஷ்டி கவசத்தின் தோற்றுவாய். அதில் மொத்தமாக சொன்னதை பாலன் தேவராயர் ஒவ்வொரு அங்கமாக பிரித்து காக்க வேண்டும் என கூறியுள்ளார். வேல் என்றால் அறிவுவேல் என்பதும் அறிவு என்பதும் ஒன்றுதான். வேலின் அமைப்பை பாருங்கள்...

முதலில் கூர்மையாக பின்னர் அகன்று அதன் பின் ஆழமாக இருக்கிறது. அதாவது அறிவு கூர்மையாக இருக்க வேண்டும் என்பதை வேலின் முனை காட்டுகிறது. அறிவு அகன்று இருக்க வேண்டும் என்பது வேலின் நடுப்பகுதி கூறுகிறது. அறிவு ஆழமாக இருக்க வேண்டும் என்பதை வேலின் அடிப்பகுதி உரைக்கிறது. இதற்கு சீவக சிந்தாமணியே சாட்சி. அதில் ஒரு பெண் மயக்கமுற்று விழுந்து விடுகிறாள். பின் மயக்கம் தெளிந்து எழும் போது அவள் வேல்பெற்று எழுந்தாள் என்கிறார் ஆசிரியர் திருத்தக்க தேவர். அதாவது அறிவு பெற்று எழுந்தாள் என்கிறார்.

ஆயுதங்களிலேயே மனிதன் பெயர் வைக்க கூடிய ஒரே ஆயுதம் வேல் தான். அரிவாள் கத்தி சூலாயுதம் என்பதெல்லாம் பெயர்களில் இருக்காது. வெற்றி வேல் வைர வேல் வஜ்ரவேல் என வேல் பெயர் தாங்கிய மனிதர்கள் ஏராளம்.எனவே வேல் என்பது ஆயுதமல்ல... அறிவு. எனவே அனைவரும் அறிவு பெற்று விளங்க வேல் வணக்கம் செய்வோம்.இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar