அஜா அல்லது அன்னதா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மவைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.
மகாராஜா யுதிஸ்டிரா கூறினார். ஓ! கிருஷ்ணா ஆடி/ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட்/ செப்டம்பர்) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியினைப் பற்றி தயவு செய்து எனக்கு விளக்குங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னா! நான் கூறுவதை மிக கவனமாகக் கேள். ஒருவரின் எல்லா பாவங்களையும் அழிக்கக்கூடிய இந்த மங்களகரமான ஏகாதசியின் பெயர் அன்னதா ஏகாதசி, இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடித்து பகவான் ரிஷகேசனை வழிபடுபவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபடுவார்.
பழங்காலத்தில் ஹரிஸ்சந்திரா என்ற ஒரு புகழ் பெற்ற மன்னர் இருந்தார். அவர் நேர்மையானவர் மற்றும் வாய்மை மிக்கவர். தன் வாழ்க்கை காப்பாற்றவும் மற்றும் சில காரணங்களினாலும் அவர் தன் இராஜ்ஜியத்தை இழந்தார். அவர் தன்னையும் தன் மனைவி மற்றும் மகனையும் விற்க நேரிட்டது. ஓ! மன்னா! இந்த புண்ணியமிகு மன்னர் ஒரு சண்டாலனின் அடியாள் ஆனார். ஆயினும் வாய்மையில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார். சண்டாள எஜமானின் கட்டளைப்படி மயானத்தில் பிணங்களின் மீதுள்ள துணிகளை தன் சம்பளமாக ஏற்றுக்கொண்டார். இத்தகைய தாழ்ந்த சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும், தான் வாய்மையில் இருந்து நழுவவில்லை. இவ்வாறாக பல ஆண்டுகள் கழித்தார்.
பிறகு ஒரு நாள் மிகுந்த துன்பத்துடன் யோசிக்கலானார். நான் என்ன செய்வது, எங்கு செல்வது, நான் எப்படி விடுபடுவேன் என்றெல்லாம் சிந்திக்கலானார். மன்னரின் இந்த அவல நிலையைக் கண்ட கவுதம முனிவர் மன்னரிடம் வந்தார். பெருமுனிவரைக் கண்ட மன்னர் மற்றவர்களின் நலனுக்காகவே பிரம்மா அந்தணர்களை படைத்துள்ளார். என எண்ணினார். அந்தணர்களில் சிறந்தவரான முனிவருக்கு மன்னர் தன் பணிவான வணக்கங்களை சமர்ப்பித்து அவர் கைகட்டி நின்றார். பிறகு தன் பரிதாபமான கதையை முழுவதுமாக முனிவரிடம் எடுத்துரைத்தார். மன்னரின் பரிதாபமான கதையை ஆச்சரியத்துடன் கேட்ட பெருமுனிவர் கூறினார். ஓ! மன்னா! (ஆடி / ஆவணி) மாதத் தேய்பிறையில் (ஆகஸ்ட் / செப்டம்பர்) தோன்றக்கூடிய அன்னதா ஏகாதசி மிகவும் மங்களகரமானது மற்றும் அனைத்து பாவங்களையும் விலக்கக்கூடியது.
இந்த ஏகாதசி வெகு விரைவில் வரவிருப்பது உன் நல்ல அதிர்ஷ்டமே உண்ணாவிரதம் மேற்கொண்டும் இரவில் விழிந்திருந்தும் நீ இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். அதன் பயனாக உன்னுடைய அனைத்து பாவ விளைவுகளும் விரைவில் அழிக்கப்படும் ஓ! மன்னரில் சிறந்தோனே! உன்னுடைய செல்வாக்கால்தான் நான் இங்கு வந்துள்ளேன். இவ்வாறு ஹரிஸ்சந்திர மன்னருக்கு அறிவுரை கூறிவிட்டு கவுதம முனிவர் மறைந்தார். முனிவரின் அறிவுரைப்படி மன்னர் அன்னதா ஏகாதசியை அனுஷ்டித்து தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுதலை பெற்றார். பகவான் கிருஷ்ணர் கூறினார். ஓ! மன்னா! இந்த ஏகாதசியின் அற்புதமான செல்வாக்கால் ஒருவர் பற்பல வருடங்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் அனைத்தும் உடனடியாக தீர்ந்துவிடும்.
மன்னர் ஹரிஸ்சந்திரா, இழந்த தன் மனைவியை மீண்டும் பெற்றார். மற்றும் இறந்த தன் மகன் மீண்டும் உயிர் பெற்றான். விண்ணில் இருந்து தேவர்கள் வாத்தியங்களை முழங்கி மலர்களை தூவினர். இந்த ஏகாதசியின் செல்வாக்கால் எந்தவொரு இடையூறு மின்றி மன்னர் தன் இராஜ்ஜியத்தை அனுபவித்தார். இறுதியாக மன்னர், தன் உறவினர்கள், சாகக்கள் மற்றும் தன் பரிவாரத்துடன் ஆன்மீக உலகை அடைந்தார். ஓ! மன்னா! இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பவர் தன் எல்லா பாவங்களில் இருந்து விடுபட்டு ஆன்மீக உலகை அடைவார். இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டாலோ (அ) படித்தாலோ ஒருவர் அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார்.