‘அவனவன் தலையெழுத்துப்படி தான் வாழ்வு நடக்கும்’ என்பர். இதை படைப்புக்கடவுளான பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம். அதனால் தலையெழுத்தை ‘பிரம்ம லிபி’ என்று பெயர். இதன் அடிப்படையில் தான், நவக்கிரகங்கள் வாழ்வில் நன்மை தீமையை ஏற்படுத்துகின்றன. முருகனை வழிபட்டால் தலையெழுத்தை மாற்றலாம் என்கிறார் அருணகிரிநாதர். ‘ முருகா! நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே’ என்று பாடியுள்ளார். முருகனை சரணடைந்தால் விதியை கூட வெல்லும் வலிமை உண்டாகும்.