அம்மன் வழிபாட்டில் புற்று வழிபாட்டிற்கு சிறப்பிடம் உண்டு. பாம்பு புற்றை ‘புற்று மாரியம்மன்’ என்று சொல்லி வழிபடுவர். ஆடி செவ்வாய், வெள்ளி புற்று வழிபாட்டுக்கு உகந்த நாட்கள். இந்நாட்களில் புற்றுக்கு முன் பொங்கலிட்டும், பால் வைத்தும் வழிபடுவர். இதனால் நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் பெருகும் என்பர். நாகாத்தம்மன் என்ற பெயரில் பாம்பை வழிபடுவோரும் உண்டு. அம்பிகையின் ஆபரணமாகவும், குடையாகவும் பாம்பு இருப்பதாகவும் குறிப்பிடுவர்.