நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலையில் அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்து பழங்களால் ஆன மற்றும் மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஊரடங்கு காரணமாக கோயிலின் முன்பாக வெளியில் இருந்தபடி அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் தங்களது வீடுகளிலேயே கூல் காய்ச்சி அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு வழங்கினர்.