பதிவு செய்த நாள்
15
ஆக
2020
10:08
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 258 இடங்களில் கொரோனா வைரஸை கொல்லும் விநாயகர் சிலைகள் அமைக்க, இந்து முன்னணி முடிவு செய்து உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி, விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் என, கோவை வடக்கு இந்து முன்னணி அறிவித்துள்ளது. இவ்வமைப்பின் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி கூறுகையில்," வழக்கமாக கொண்டாடப்படும் மூன்று நாள் விழா, இந்த ஆண்டு ஒரு நாள் விழாவாக, ஊர்வலம், பொதுக்கூட்டம் இல்லாமல், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கொண்டாடப்படும். அனைத்து இடங்களிலும், வைரஸை கொல்லும் உருவ அமைப்புடைய விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.