* ராம நாமத்தில் நம்பிக்கை கொண்ட அனுமன் கடலை கடந்தார். ஆனால் ராமனோ பாலம் கட்ட வேண்டியிருந்தது. * அநியாயம், பொய்யை எதிர்த்து நிற்காமல் சும்மா இருப்பது அறியாமை. * கடவுளை ஆராய்ச்சி செய்யாதே. நம்பிக்கையுடன் சரணடை. * விவேகம் இல்லாவிட்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகாது. * கடவுளின் அருள் இருந்தால் அறியாமையில் இருந்து விடுபடலாம். * விழிப்புடன் இருந்தால் தீய எண்ணம் வராது. * எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. * இளமைக் காலமே ஆன்மிகத் தேடலுக்கு ஏற்றது. * உலக ஆசைகளில் இருந்து கொண்டே மனதை அடக்கியாள்பவனே உண்மை வீரன். * மற்றவர் குறைகளை பற்றி பேசுபவன் நேரத்தை வீணாக்குகிறான். * உனக்குள் கடவுள் இருக்கிறார். அவரை வெளியில் தேடாதே. * உன்னை நேசி. மற்றவர் மீது வெறுப்பு வேண்டாம். * பெருமை அடைய விரும்பினால் அடக்கத்தோடும், பணிவோடும் இரு. * எப்போதும் பயனுள்ள பணியில் ஈடுபடு. * பெருமை பேசுவதில் பயனில்லை. உன்னிலும் சிறந்தவர் பலர் இருக்கிறார்கள். * விடாமுயற்சி உள்ளவனுக்கு எல்லாம் சாத்தியம். அது இல்லாதவனுக்கு ஒன்றும் கிடைக்காது.