* காலையில் எழுந்தவுடன் ‘வாழ்க வையகம்’ என வாழ்த்துங்கள். * ஒரு செடியை வாழ்த்தலாம். அதன் மூலம் செடியின் பலவீனம் நீங்கும். * ஆசையை சீர்படுத்தினால் வாழ்வு ஆனந்தமாகும். * கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. * மனதில் கருணை, உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் கொண்டவரே நல்லவர். * கடமையில் ஈடுபாடு இருந்தால் உன் உரிமையும், நலனும் பாதுகாக்கப்படும். * உள்ளத்தில் உறுதி, செயலில் ஒழுக்கம் இருந்தால் குறிக்கோளை அடையலாம். * இன்பத்தை விட துன்பத்தில் கிடைக்கும் அனுபவம் மதிப்பு மிக்கது. * ஆசையை அடக்காமல் அறிய முயன்றால் அது கட்டுப்படும். * உழைப்பால் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது. * உண்மையும், நேர்மையும் துன்பத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. * அன்பு, அருள், இன்முகம் கொண்ட நல்லவர்களின் படங்களை வீட்டில் வையுங்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். * தனி மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் சமுதாயம் மகிழ்ச்சியாக வாழும். * நற்செயலில் ஈடுபடுவதால் கிடைக்கும் மனநிறைவே நிஜமான மகிழ்ச்சி. * கடமை தவறாதவர்களால் கடவுள் மீது பக்தி செலுத்த முடியும். * இனிமையாகப் பேசினால் உலகையே வசப்படுத்தலாம். . * தேவையான சூழ்நிலையில் கோபம் கொண்டது போல நடிக்கலாம். * எந்த நிலையிலும் கோபம் வராவிட்டால் அவர் ஞானம் பெற்றதாகப் பொருள்.