சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ நாயகருக்கு பால்,தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம், ரவி குருக்கள், கணபதி பங்கேற்றனர். கொரோனா காரணமாக பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டது.இதே போல் சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், தியாகராஜபுரம், மஞ்சபுத்துர், முக்கனுர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.